RF வெளிப்பாடு மற்றும் குறிப்பிட்ட உள்வாங்குதல் வீதங்கள் (Specific Absorption Rates) தகவல்கள்

RF வெளிப்பாடு மற்றும் குறிப்பிட்ட உள்வாங்குதல் வீதங்கள் (Specific Absorption Rates) தகவல்கள் உங்கள் சாதனம் இயக்கத்தில் உள்ளபோது, குறைவான அளவுகளில், ரேடியோ அதிர்வெண் (RF) ஆற்றலை வெளியிடுகிறது. மேலும் இது Wi-Fi® அல்லது Bluetooth® செயல்பாடு இயக்கத்தில் உள்ளபோதும் நிகழும். சாதனங்கள் மூலம் RF ஆற்றல் வெளிப்பாட்டுக்கு ஆளாவது, குறிப்பிட்ட உள்வாங்குதல் வீதம் (SAR) என்ற அலகின் மூலம் அளவிடப்படுகிறது. இந்தச் சாதனத்தின் SAR மதிப்புகள், சர்வதேச SAR வரம்பு வழிகாட்டுதல்களை நிறைவு செய்கின்றன, மேலும் சாதனத்தின் மதிப்புகள் அந்த வழிகாட்டுதல்களில் உள்ளதை விடவும் குறைவான அளவுகளில் உள்ளன.

அயனியாக்காத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் (International Commission of Non-lonizing Radiation Protection - ICNIRP) அல்லது மின்சாரவியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பால் (Institute of Electrical and Electronics Engineers - IEEE) பரிந்துரைக்கப்பட்ட SAR வரம்புகளை ஏற்றுக் கொண்ட நாடுகளில் வசிப்பவர்களுக்கு SAR தரவுத் தகவல் தரப்பட்டுள்ளது. ICNIRP ஆனது 10 கிராம் உடல் திசுவில், சராசரியாக 2W/kg என்ற SAR வரம்பைக் குறிப்பிடுகிறது, IEEE ஆனது, 1 கிராம் உடல் திசுவில், 1.6W/kg என்ற SAR வரம்பைக் குறிப்பிடுகிறது. வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா நபர்களுக்கும் பாதுகாப்பான வரம்புகளை உள்ளடக்கிய அறிவியல் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரம்புகள் தரப்பட்டுள்ளன.

SAR நிலைகளுக்கான சோதனைகள், சாதனம் அதன் அதிகபட்ச சான்றளிக்கப்பட்ட ஆற்றல் நிலையில் கடத்தும்போது, எல்லா அதிர்வெண் பேண்ட்களிலும், தலை மற்றும் உடலில் வைக்கப்படும்போது தரநிலையாக்கப்பட்ட முறைகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனாலும், நெட்வொர்க்கை அணுகுவதற்கு, குறைந்தபட்ச ஆற்றலை மட்டுமே பயன்படுத்துமாறு சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், உண்மையான SAR அளவானது, இந்த மதிப்பை விட மிகவும் குறைவாக இருக்கும். பல்வேறு மாடல்களுக்கிடையே SAR அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்துமே, ரேடியோ அலைகளுக்கான வெளிப்பாட்டுடன் தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பூர்த்திசெய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

SAR மதிப்புகளும் சோதனை தொலைவுகளும், அளவீட்டு முறை, சோதிக்கப்படும் சாதனம் மற்றும் Wi-Fi செயல்பாடு இயக்கத்தில் உள்ளதா என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆனால் அதிகபட்ச SAR மதிப்புகள் மட்டுமே தரப்படுகின்றன.

சாதனங்களைப் பயன்படுத்தும்போது, விசேஷ முன்னெச்சரிக்கைகள் தேவை என்று தற்போதைய அறிவியல் தகவல்கள் சுட்டிக்காட்டவில்லை என்று WHO (உலக நல வாரியம்) குறிப்பிட்டுள்ளது. இந்தத் தலைப்பில் கூடுதல் விவரங்கள் அறிய, http://www.who.int/peh-emf/en/ க்குச் செல்லவும், அதில், உண்மை விவரங்கள் தாள் எண்.193 (Fact sheet No.193) http://who.int/mediacentre/factsheets/fs193/en/ Electromagnetic fields and public health: mobile phones -என்பதைக் காணவும். SAR-தொடர்பான கூடுதல் விவரங்களை Mobile Manufacturers Forum EMF இணையதளத்தில், http://www.emfexplained.info/ -என்ற முகவரியிலும் பெறலாம்

ரேடியோ அலைகளுக்கான வெளிப்பாடு (SAR) குறித்த வட்டாரம் சார்ந்த குறிப்பிட்ட விவரங்களைப் பெற, உங்கள் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்:

இந்தியா (IN)

தைவான் (TW)

உலகின் மற்ற பகுதிகள் (RoW)